60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மின்மயானத்தை உடனடியாக திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள கூடலூர் நகராட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ரூபாய் செலவில் பொது மின் மயானம் கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.
ஆனால், அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் இதுவரை மின்மயானம் செயல்படுத்தப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மின்மயானத்தில் தகனம் செய்தால் குறைந்த செலவே பிடிக்கும் என்பதால் நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மின்மயானத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.