சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய லஞ்சம் பெற்ற புகாரில், தேர்வுக்கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பதவியிலிருந்து உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைகழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக உமா வீட்டில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் 60 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமா, அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பல கோடி ரூபாய் வசூல் வேட்டையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. புகார்கள் வலுத்து வரும் நிலையில், தேர்வுக்கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பதவியிலிருந்து உமாவை பணியிடை நீக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.