வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

2 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி! August 3, 2018

Image

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக,  லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில், 
லஞ்சம் பெற்று கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனைகளில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத காரணத்தினால் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, அனைத்து பொறுப்புகளையும் கண்காணித்து வந்துள்ளார். 

அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ஒரு ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் துணைவேந்தர் ஒருவரும் சிக்குவார் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர் . விரைவில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.