பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்க பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாலியல் கல்வி அளிப்பது, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக துணை ஐஜி மகேஸ்வரன் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் பதிலளித்தார். அதில், பள்ளிகளில் பாலியல் கல்வி அளிக்க பெற்றோரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும், அதற்கு பதிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 87 ஆயிரத்து 743 அரசு மற்றும் வர்த்தக கட்டடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.