கன்னியாகுமரி அருகே ஆபத்தை உணராமல் தண்ணீரின் நடுவே பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால், தாமிரபரணி ஆற்றிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே சிற்றார் அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள், மாற்று இடங்களுக்கு செல்ல பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழித்துறை -வெட்டுவென்னி சப்பாத்து பாலத்தை பயன்படுத்து வருகின்றனர். பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதை பொருட்படுத்தாமல் ஆபத்தான பணத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.