
உலகின் மிகப்பெரிய அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவை சேர்ந்த NRCPC நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரு விநாடிக்கு பல ஆயிரம் கோடி கணக்கீடுகளை செய்து முடிக்கும் திறன் படைத்தது என்று அதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் சீனா அமெரிக்காவை விஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் மருத்துவதுறையில் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.