வியாழன், 9 ஆகஸ்ட், 2018

​மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள house lifting முறை! August 6, 2018

Image

ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக, HOUSE LIFTING முறையில், வீட்டை 5 அடி உயரம் உயர்த்தும் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

ஈரோடு கோட்டை தில்லைநகர் பகுதியில் பகுதியில், மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கிடுவதால், தட்சிணாமூர்த்தி என்பவர்,  2 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள, தனது மூன்றடுக்கு கட்டிடத்தை, நவீன முறையில் 5 அடி உயர்த்திட முடிவு செய்தார். 

இதனையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஜாக்கிகளைப் பொருத்தி, 26 பணியாளர்களுடன்  கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பணி, அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது. இத்தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில், தனது வீட்டை சீரமைத்துள்ளதாக, வீட்டின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.