வியாழன், 9 ஆகஸ்ட், 2018

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! August 7, 2018

Image


சென்னை மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை அண்ணாநகரை சேர்ந்த காந்திமதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அனுமதிக்க கூடாது என்றும், நினைவிடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை மெரினா கடற்கரையில், நினைவிடங்கள் அமைக்க மாநகராட்சி ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கு முன் மனுதாரர் காந்திமதி தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.