சனி, 4 ஆகஸ்ட், 2018

திருச்சிராப்பள்ளியிலிருந்து அமெரிக்கா - வழி சிங்கப்பூர்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து, சிங்கப்பூர் வழியாக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோவிற்கு ஸ்கூட் ஏரின் விமானசேவை.
Image may contain: sky, airplane and outdoor
தற்போது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர் ஆனது வாரத்திற்கு 14 சேவைகளை (தினசரி இரண்டு) சிங்கப்பூருக்கு வழங்கி வருகின்றது. இதனுடைய இயக்கத் தலைமையகமாய் (Hub) உள்ள சிங்கப்பூரில் இருந்து கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, ஆஸ்த்திரேலியா உள்ளிட்ட இந்த ஸ்கூட் ஏர் சேவை வழங்கும் விமானநிலையங்களுக்கு மட்டும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து இணைப்பு விமானசேவைகள் வழங்கப்பட்டன.
தற்போது பெருகிவரும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு,
இந்த ஸ்கூட் ஏர் விமானநிறுவனம் தனது மூல (Parent) விமானநிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சக வணிகக் கூட்டாளியான சில்க் ஏர் ஆகியவற்றின் உதவியால் ,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக,
கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த பசிபிக் பிராந்தியம் முழுமைக்கும் சில குறிப்பிட்ட முக்கிய விமானநிலையங்களுக்கு சேவை வழங்குகிறது.
இதனடிப்படையில் விமானப்பயணமானது,
திருச்சிராப்பள்ளியில் இருந்து சிங்கப்பூர் வரை ஸ்கூட் ஏரிலும்,
சிங்கப்பூரில் இருந்து கிழக்கு ஆசியா, வடக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஒட்டுமொத்த பசிபிக் பிராந்தியம் முழுமைக்கும் சில குறிப்பிட்ட முக்கிய விமானநிலையங்களுக்கு இணைப்பு விமானசேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது சில்க் ஏர் மூலமாக வழங்குகிறது.
சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது சில்க் ஏர் மூலமாக வழங்கப்படும் இணைப்பு விமானசேவை விபரங்கள் வருமாறு.
A). கிழக்கு ஆசியாவைப் பொறுத்து,
1. இந்தோனேசியா 🇮🇩
I. சொகர்னோ ஹத்தா பன்னாட்டு விமானநிலையம் - CGK, ஜகார்த்தா.
II. குரஹ் ராய் பன்னாட்டு விமானநிலையம் - DPS, பாலி.
2. புருனே 🇧🇳
புருனே பன்னாட்டு விமானநிலையம் - BWN.
3. பிலிப்பைன்ஸ் 🇵🇭
நினோய் அகுய்னோ பன்னாட்டு விமானநிலையம் - MNL, மணிலா.
ஆகிய விமானநிலையங்களுக்கும்,
B) வடக்கு ஆசியாவைப் பொறுத்து,
1. ஹாங்காங் 🇭🇰
ஹாங்காங் பன்னாட்டு விமானநிலையம் - HKG.
2. சீனா 🇨🇳
I. பீஜிங் கேப்பிடல் பன்னாட்டு விமானநிலையம் - PEK, பீஜிங்.
II. குவாங்சோ பையுன் பன்னாட்டு விமானநிலையம் - CAN, குவாங்சோ.
III. ஷாங்காய் போடோங் பன்னாட்டு விமானநிலையம் - PVG, ஷாங்காய்.
3. தென்கொரியா 🇰🇷
இன்சியான் பன்னாட்டு விமானநிலையம் - ICN, சியோல்,
4. ஜப்பான் 🇯🇵
I. புகுவோகா பன்னாட்டு விமானநிலையம் - FUK, புகுவோகா.
II. சுபு சென்ட்ராய்ர் பன்னாட்டு விமானநிலையம் - NGO, நகோயா.
III. ஹிரோஷிமா பன்னாட்டு விமானநிலையம் - HIJ, ஹிரோஷிமா.
IV. கன்சாய் பன்னாட்டு விமானநிலையம் - KIX, ஒசாகா.
V. நாரிடா பன்னாட்டு விமானநிலையம் - NRT, டோக்யோ.
VI. ஹேனடா பன்னாட்டு விமானநிலையம் - HND, டோக்யோ,
ஆகிய பன்னாட்டு விமானநிலையங்களுக்கும்,
C) தென்மேற்கு பசிபிக் நாடுகளைப் பொறுத்து,
1. ஆஸ்த்திரேலியா 🇦🇺
I. டார்வின் பன்னாட்டு விமானநிலையம் - DRW,
II. கான்பெர்ரா பன்னாட்டு விமானநிலையம் - CBR,
III. சிட்னி பன்னாட்டு விமானநிலையம் - SYD,
IV. மெல்போர்ன் பன்னாட்டு விமானநிலையம் -MEL,
V. அடிலெய்டு பன்னாட்டு விமானநிலையம் - ADL,
VI. பெர்த் பன்னாட்டு விமானநிலையம் - PER,
VII. கெய்ன்ஸ் பன்னாட்டு விமானநிலையம் - CNS,
VIII. பிரிஸ்பேன் பன்னாட்டு விமானநிலையம் - BNE,
2. நியூஸிலாந்து 🇳🇿
I. வெலிங்டன் பன்னாட்டு விமானநிலையம் - WLG,
II. ஆக்லாந்து பன்னாட்டு விமானநிலையம் - AKL,
III. கிரைஸ்ட்சர்ச் பன்னாட்டு விமானநிலையம் - CHC,
ஆகிய பன்னாட்டு விமானநிலையங்களுக்கும்,
D) அமெரிக்கா 🇺🇸
I. சான் பிரான்ஸிஸ்கோ பன்னாட்டு விமானநிலையம் - SFO,
II. லாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு விமானநிலையம் - LAX,
ஆகிய பன்னாட்டு விமானநிலையங்களுக்கும் இன்றைய அளவில்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து,
சிங்கப்பூர் வழியாக,
சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது சில்க் ஏர் மூலமாக இணைப்பு விமானசேவைகள் வழங்கப்படுகிறது.
மேற்சொன்ன அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ விமானநிலையங்கள் உள்ளிட்ட 28 விமானநிலையங்களுக்கும்,
திருச்சிராப்பள்ளியில் இருந்து ஸ்கூட் ஏர் வழியாக பயணிக்கும்போது,
சேருமிடம் வரை உள்ள பயண அனுமதிச்சீட்டு (Boarding Card) இங்கேயே வழங்கப்படும். (Through Check-in)
பாதுகாப்புச்சோதனைகள் முடித்த பயண உடைமைகளை சேருமிடத்தில் சென்று எடுத்துக்கொள்ளலாம். (Through Baggage).
சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் மற்றும் ஸ்கூட் ஏர் மூன்றுமே ஒரே குழுமமாக இருந்தாலும்,
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் இரண்டும் முழு சேவை விமானநிறுவனங்களாகும். இவையிரண்டும் ஏற்கனவே தங்களுக்குள் இணைப்பு மற்றும் தொடர் பயணத்தை பரிமாறிக்கொண்டன.
ஆனால், ஸ்கூட் ஏர் விமானநிறுவனமானது குறைந்த கட்டண விமானநிறுவனமாக இருந்ததால்,
இதிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் விமானநிறுவன சேவைகளுக்கு இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகள் அனுமதிக்கப்படாமலேயே இருந்தது. இதனாலேயே இவ்வளவு காலமும், அதாவது ஸ்கூட் ஏர் விமானநிறுவனத்தின் சேவைகள் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் கடந்த 2008 டிசம்பரில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து,
முக்கியமான வடக்கு ஆசியா, ஆஸ்த்திரேலியா மற்றும் அமெரிக்காவின் விமானநிலையங்களுக்கு இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகள் சாத்தியப்படாமல் இருந்தது.
தற்போது பெருகி வரும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் பன்னாட்டு பயணிகள் எண்ணிக்கை, தேவை மற்றும் முக்கியத்துவம் கருதி ஸ்கூட் ஏர் உடனும் இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகளை பரிமாறிக்கொள்ள முடிவெடுத்துள்ளன.
இந்திய அளவில்,
ஸ்கூட் ஏர் விமானநிறுவனத்தின் சேவைகள் திருச்சிராப்பள்ளி, மெட்ராஸ், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், லக்னௌ, ஜெய்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்தாலும்,
ஸ்கூட் ஏர் உடன் இணைந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் விமானநிறுவனங்களின் இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகள் பரிமாற்றத்தால் அதிகம் பலனடைவது திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையமேயாகும்.
ஏனெனில்,
மேற்கண்ட ஊர்களில் மெட்ராஸ், பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் விமானநிலையங்களில் ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏரின் சேவைகள் உள்ளதால் இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகள் பரிமாற்றத்தால் பெரிய அளவில் பலன் இருக்காது.
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் மட்டுமே மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக,
அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, புருனை மற்றும் ஹாங்காங் விமானநிலையஙக்களுக்கான தேவை (Demand) திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து அதிகமாகும்.
இதனால் இந்த இணைப்பு மற்றும் தொடர் விமானசேவைகள் பரிமாற்றத்தால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் இரண்டுமே முழு சேவைக் கட்டண விமானநிறுவனங்களாக இருப்பதால் (Full service carriers) பல பிரத்தியோகச் சலுகைகள் உள்ளன.
அடிப்படையான பயண உடைமைச் சலுகைகள்,
பயணத்தில் வழங்கப்படும் உணவு,
விமானத்தில் வசதியான இருக்கைகள் அமைப்பு,
அடிக்கடி பயணிப்போருக்கான பயணப்புள்ளிகள் (Points),
புள்ளிகளைப் பொறுத்து நிலை (Tier),
புள்ளிகளையும் நிலையையும் பொறுத்த தகுதிகள் (Silver, Gold, etc.. Cards),
தகுதியைப் பொறுத்த சலுகைகள் (Benefits).
புறப்பாடு, இடைத்தங்கல், சேருமிடங்களில் உள்ள ஓய்வகங்கள் (Lounge) அனுமதி,
விமானநிலையங்களில் உள்ள வரி இல்லா கடைகளில் (Duty free) வாங்கப்படும் பொருட்கள் மீதான தள்ளுபடிகள், உணவகங்களில் உணவுப்பொருட்கள் மீதான தள்ளுபடிகள்.
புள்ளிகளைக் கொண்டு மீட்டெடுக்கப்படும் (Redemption) சலுகை பயணச்சீட்டுகள்,
உயர் வகுப்பு மேம்பாடு (Upgrade) என்ற பல சேவைகள் அடங்கியதே முழு சேவைக்கட்டண விமானசேவையாகும்.
இவை எதுவுமே இல்லாதது குறைந்த கட்டண விமானச்சேவையாகும்.
திருச்சிராப்பள்ளி - சிங்கப்பூர் வழித்தடத்தில் சேவை வழங்கும் ஸ்கூட் ஏர் இவ்வாறான சலுகைகள் அற்ற குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமாகும்.
எனவே எந்தச் சலுகைகளும் இல்லாத குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஸ்கூட் ஏர் மற்றும்,
பல சலுகைகள் மற்றும் வசதிகளை உள்ளடக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் ஆகியவற்றை இணைத்து,
இணைப்பு மற்றும் தொடர் விமான சேவைகளை அளிக்கும்போது,
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏரில் பயணித்தால் பயணிகளுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்குமோ அத்துணை சலுகைகளையும்,
ஸ்கூட் ஏரில் கிடைக்கும்படி இந்த இணைப்பு மற்றும் தொடர் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
உதாரணமாக,
ஒரு பயணி, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் விமானநிலையத்திற்கு பயணிக்கும் பட்சத்தில்,
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வரை ஸ்கூட் ஏரிலும், சிங்கப்பூரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸிலும் பயணிப்பார்.
இந்தப் பயணத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கு கிடைக்கும் சலுகைகளான உணவு, பயண உடைமை, பயணக்கட்டணம் மற்றும் பயண வகுப்பைப்பொறுத்த புள்ளிகள் (Privilege Points) அனைத்துமே ஸ்கூட் ஏர் பயணத்திற்கு வழங்கப்படும் என்பது சிறப்பம்சமாகும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் பயணிகளுக்கு,
ஸ்கூட் ஏரில் பயணிப்பதால் எவ்வித சலுகைக்குறைவோ அசௌகரியமோ ஏற்படாது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் தெளிவு படுத்தியுள்ளது.
தற்போது இந்த பயணத்திற்கு தேவையோன முன்பதிவு பயணச்சீட்டுகள்,
விமானப் பயண ஏற்பாட்டாளர்களால் மட்டுமே (Travel Agents) வழங்கப்படும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அல்லது சில்க் ஏர் பயணச்சீட்டாக (Itinerary) (618 Document) அங்கீகாரம் பெற்ற IATA விமானப் பயண ஏற்பாட்டாளர்களால் மட்டுமே (Travel Agents) வழங்கப்படும். பயணிகள் தங்கள் தேவைக்கு அருகில் உள்ள விமானப் பயண ஏற்பாட்டாளர்களை அணுகவும்.
சேவையில் உலகத்தரம் வாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானநிறுவனமானது திருச்சிராப்பள்ளிக்கு தனது வருகை இல்லாமலேயே ஸ்கூட் ஏர் வழியாக தனது சேவைத்தரத்தை மேற்கண்ட 28 விமானநிலையங்களுக்கான வழித்தடத்தில் வழங்க இருப்பது நிச்சயம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு பெருமையே!
விரைவில் மேலும் அதிக விமானநிலையங்களுக்கு சேவைகள் அதிகரிக்கப்படும் என நம்புவோமாக!
விரைவில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு உலகத் தரம்வாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸோ அல்லது அதன் துணை விமானநிறுவனமான சில்க் ஏரின் சேவை கிடைக்குமென நம்புவோமாக!