அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வணிகத் தளங்களில் அதிரடி சலுகைகளுடன், விலையைக் குறைத்து விற்பனை செய்யும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்னணு வணிகத்தில் பன்முகத்தன்மையுடன் கூடிய ஒரு ஒழுங்குமுறையை உருவாக்குவது தொடர்பாக,தொழிவ்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டது.
இதில் உள்ளூர் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட மின் வணிகக்கொள்கையில், உள்ளூர் பொருள் விற்பனை ஊக்கப்படுத்த வசதியாக விதிமுறைகள் சேர்க்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டில் இந்திய பொருட்கள், சிறு மற்றும் குறு தொழில்களின் தயாரிப்புகளை மின்னணு வணிகத் தளத்தில் விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சந்தையில் 25 மில்லியன் டாலரில் இருந்து 250 மில்லியன் டாலர் வரை இதன் மூலம் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழில்துறைக்கு வாய்ப்பு அளிப்பதோடு, வரிச்சலுகைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏதுவாகச் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் செய்யுமாறு நிதித்துறைக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.
அங்காடிகள் மட்டும் அல்லாமல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் விலை சலுகைகளை அறிவிக்கக் கூடாது என வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரே பொருளுக்கு வேறு வேறு சலுகை விலைகளை அறிவிக்கத் தடை விதிக்கவும், ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஒரு பொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வர விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நுகர்வு கலாச்சாரத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.