நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இதமான சூழல் நிலவுவதால், வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த சரணலாயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை, வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கோடியக்கரை சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.
சைபீரியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பூநாரை, கூழைக்கிடா, ஆர்டிக் பிரதேசத்தை சேர்ந்த ஆர்டிக்டேன் உள்ளிட்ட பறவைகள், சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன. இதனால் சரணாலயம் ரம்மியமாக காட்சியளிக்கிறது.