சனி, 31 ஆகஸ்ட், 2019

GDP வீழ்ச்சியால் வெட்டவெளிச்சமானது பொருளாதார மந்தநிலை: ஸ்டாலின்

உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாக குறைந்திருப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பது, வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை மத்திய புள்ளியியல் துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, அதற்கு முந்தைய காலாண்டில்...

அறந்தாங்கியில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் சர்ச்சை!

அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட விளம்பர பேனரில்  காஷ்மீர் நிகழ்வு குறித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், விளம்பர பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.  இதில் பாஜகவை சேர்ந்த முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர்...

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) 19 லட்சம் பேரின் பெயர்கள் மிஸ்ஸிங்...!

Credit ns7.tv அசாமில் இன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் ஆவணத்தில், 19 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.  அசாமில் வங்கதேச நாட்டினர் அதிகளவில் குடியேறியுள்ள நிலையில், அவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் ஆவணம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், அசாமில் வசிப்பவர்களில் 41 லட்சம் பேரின்...

சட்டவிரோத மதமாற்றத்தை தடுக்கும் புதிய மசோதாவை நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு..!

சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது ஹிமாச்சல் பிரதேச அரசு. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத முறையில் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு பதிலாக தற்போது புதிய சட்டத்தை இயற்ற மசோதா ஒன்றை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அரசு அம்மாநில சட்டப்பேரவையில்...

ட்விட்டர் நிறுவன CEOவின் ட்விட்டர் கணக்கிலேயே புகுந்து விளையாடிய ஹேக்கர்கள்!

ட்விட்டர்  நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) Jack Dorsey-ன் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் ஹேக் செய்துள்ளது  சிஇஓ Jack Dorsey-ன் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட Jack Dorsey-ன் கணக்கில் ஆச்சேபிக்கத்தக்க வகையிலான தகவல்களை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இணப்பாகுபாடு குறித்த பதிவுகளைகளையும் அவர்கள் அதில் வெளியிட்டுள்ளனர்....

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைமடை பகுதிக்கு வந்து சேராத காவரி நீர்... நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், திருவாரூர் கடைமடை பகுதிக்கு வந்து சேராததையடுத்து, விவசாயிகள் ஆற்றின் கதவணைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கடந்த 13 ஆம் தேதி மேட்டூரில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சம்பா சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லணை வந்து சேர்ந்த நீரை, கடந்த 23ஆம் தேதி பாசனத்திற்கு...

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலியாக மாறிய ஜோதிராதித்ய சிந்தியா?

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காவிட்டால் வேறு வழிகளை பார்க்க வேண்டியிருக்கும் எனவே இது தொடர்பாக உடனடியாக முடிவு கிடைக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கு மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கெடு விதித்துள்ளதாக...

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.  அரசு முறை பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் சுகதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. தமிழகத்தில் நகர...

வருமானவரித்துறைக் கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்...!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மீண்டும் நீட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வருமான வரித்துறை,...

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலாமா?

மரத்தொழில் செய்கின்ற நாங்கள் மரத்தில் சாமி உருவப் படம் பொறிக்கின்ற வேலை செய்யலா...

ஜம்மு காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் - சத்யபால் மாலிக்

Credit NS7.tv 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார். எனினும் இதனால் யாரும் பெரிய காயம் அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  ஐம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம்...

பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

கர்நாடகாவை போன்று மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, அது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார் கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்று பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே அரசு, ஒரே தலைவர், ஒரே கட்சி முறையை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருவதாக கூறினார். இந்தியாவில் அதிபர் முறையை...

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பியூஷ் மானுஷ்...!

சேலத்தில் பாஜகவினர் தாக்கியதில் காயம் அடைந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.  அதன்படி...

பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்..!

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜக-வினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.  இந்நிலையில், ட்விட்டரில்...

ஹெல்மெட் வழக்கு : அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

ஹெல்மெட் வழக்கில், நீதிமன்றம் கேட்கும் விவரங்களை வழங்காத அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி, கே.கே.ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய...

புதன், 28 ஆகஸ்ட், 2019

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீண்டும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.  காற்றழுத்த...

ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டம்!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை போல ஏடிஎம்களிலும் ஓடிபி எண்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம் என்ற பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம்...

பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் இனி அபராதம்..!

பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.   சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள வரைவின்படி பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மீது, இது மக்கக்கூடியது, இது மறுசுழற்சி...

சந்திரயான் 2: 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி வெற்றி...!

நிலவின் வட்டப்பாதையில் சந்திரயானை 3வது முறையாக நிலை உயர்த்தும் பணி இன்று வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தென்துருவப்பகுதியை ஆராய சந்திரயான் விண்கலம், கடந்த மாதம் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் விண்கலம் கடந்த 20 ஆம் தேதி வெற்றிகரமாக நுழைந்தது. இதனை அடுத்து, விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவின் 2...

கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி எவ்வளவு? August 28, 2019

ரிசர்வ் வங்கி தன் கையிருப்பில் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாக மத்திய அரசுக்கு அளிக்கவிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் பெற்ற உபரிநிதி குறித்த விபரங்கள்: ➤2008 இல் 15 ஆயிரத்து 11 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து மத்திய அரசு பெற்றது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி. ரெட்டி.  ➤2009 இல் 25 ஆயிரத்து 9 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் உபரி...

பொருளாதார மந்த நிலை என்றால் என்ன? August 28, 2019

credit ns7.tv பொருளாதார மந்த நிலை...சமீப காலமாய் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ள வார்த்தை இது... பொருளாதார மந்த நிலை என்றால் என்ன? ஒருவர் பல் துலக்க பயன்படுத்தும் ஒரு பேஸ்ட் டியூப்பை மாதத்தில் 25 நாட்கள் பயன்படுத்தி விட்டு, மீதமிருந்தாலும் அதை தூக்கிப்போட்டு விட்டு, புதிதாக ஒரு பேஸ்ட்டை வாங்கினால் கூடுதலாக ஒரு பொருள் விற்கும். அதுவே அந்த பேஸ்ட் தீரும் வரை அழுத்தி அழுத்தி,...

ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் பட்டியல்!

credit ns7.tv திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்க ஐ.நா அனுமதி அளித்துள்ள நிலையில் இதுவரை இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசியல் தலைவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஐ.நா மன்றத்தில் உரையாற்ற வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி...