காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை கொண்டாடும்விதமாக நாடாளுமன்ற வளாக கட்டிடம் வண்ண விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டநிலையில், லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாமலும், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என மாநிலங்களவையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை கொண்டாடும் வகையில் நாடாளுமன்ற வளாகம் வண்ணவிளக்குகளில் ஒளிர வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீரை பிரிப்பதால் தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் என்றும் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய தேசம் மக்களால் உருவானது என்றும், இது நிலத்தால் உருவாகவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிர்வாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
credit ns7.tv