சனி, 1 ஆகஸ்ட், 2020

ப்ளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை – ஆந்திர முதல்வர் அறிவிப்பு

 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவில் இருந்து குணம் ஆகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் ப்ளாஸ்மா தானம் அளிக்க முன் வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பெற்றுவரும் நபர்களோடு ஒப்பிடுகையில் ப்ளாஸ்மா தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க : தமிழகத்தில் ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா – 97 பேர் பலி

ப்ளாஸ்மா தானம் செய்ய முன்வரும் நபர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அதிக அளவில் ப்ளாஸ்மா பெறப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

ஆந்திராவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,557. இதுவரை 60,024 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கததால் 1,281 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 10 ஆயிரத்து 376 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மகாராஷ்ட்ரா, தமிழகத்தை அடுத்து அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆந்திரா மாறியுள்ளது.