மும்மொழிக் கொள்கை பற்றி தமிழக அரசு உடனே மவுனத்தை கலைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் ,சமூகநீதிக்கும் , இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிராக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அமைதி காப்பதாக கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கையில், பேரறிஞர் அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி தமிழக அரசு உடனே மௌனம் கலைத்தாக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.