குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு பொருளாக இருப்பது சாக்லேட். 1950களில், மெக்ஸிகோ, அமெரிக்கா போன்ற பகுதிகளில் மட்டும் பிரபலமாக இருந்த சாக்லேட் தற்பொழுது உலகம் முழுவதும் மிக முக்கியமான உணவு பொருளாக மாறி இருக்கிறது.
சாக்லேட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான தகவல்கள்:
1. இதயத்திற்கு நல்லது:
அதிக அளவு கோகோவை பயன்படுத்தி, டார்க் சாக்லேட் ( dark chocolate ) தயாரிக்கப்படுவதால், அதனை சாப்பிடுவது, இதயத்திற்கு மிகுந்த பலனை அளிக்கிறது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கலாம்.
2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மேலும், நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும் செல்களை தூண்டுகிறது. அதனால், சாக்லேட், நோய் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
3. இருமலை குறைக்கும்:
இருமல் இருக்கும்பொழுது, சாக்லேட் சாப்பிடுவதனால், இருமலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
4. மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது:
சாக்லேட் சாப்பிடுவதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. மேலும், சாக்லேட் சாப்பிடுவதால், ஒரு செயலில் அதிக கவனம் செலுத்த முடியும் என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிகின்றனர்.
5. உடல் எடையை குறைக்க உதவுகிறது:
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்றில், எப்போதாவது ஒரு முறை சாக்லேட் சாப்பிடுபவர்களை விட, அடிக்கடி சாக்லேட் சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் குறைகிறது என தெரியவந்துள்ளது. மேலும், டார்க் சாக்லேட்டில் அதிக சத்துக்கள் இருந்தாலும், உடல் எடையை குறைக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.
6. செரிமானத்திற்கு உதவுகிறது:
டார்க் சாக்லேட், சில வயிற்றுப்பிரச்சனைகளுக்கும், செரிமான கோளாறுகளுக்கும் ஒரு தீர்வாக இருக்கிறது.