திங்கள், 2 ஜூலை, 2018

மொழிகளின் தேசம் இந்தியா! July 2, 2018

மொழிகளின் தேசம் என்று கூறும் வகையில், இந்தியாவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இதுகுறித்த புள்ளிவிவரங்களை தற்போது பார்ப்போம்.

➤இந்தியாவில் 19 ஆயிரத்து 569 மொழிகள், தாய் மொழிகளாக பேசப்படுவதாக, தலைமை பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤நம் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது, அதனுடன் சேர்த்து, ஒவ்வொரு தனிநபரின் தாய்மொழி குறித்த புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

➤இந்தியாவில் பேசப்படும் 121 மொழிகளை தவிர்த்து, மற்ற மொழிகள் அனைத்தும் 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்களால் பேசப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

➤நமது நாட்டின் மக்கள் தொகையில் 96.71 சதவீதத்தினர், அரசியலமைப்பு சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றை தாய் மொழியாக கொண்டுள்ளனர்.