டெல்லியில் இன்று முதன்முறையாக, காவிர் நீர் மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இந்நிலையில், அந்த ஆணையத்தின் அதிகாரங்கள் என்னென்ன, என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
➤உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி அனைத்து பணிகளையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும்
➤காவிரி நீர் சேமிப்பு, பகிர்மானம், ஒழுங்காற்றுமை உள்ளிட்ட அனைத்தையும் இந்த ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
➤மேலும் அணையின் நீர் திறப்பு, செயல்பாடுகளை இந்த ஆணையமே கண்காணிக்கும், அதற்கே அனைத்து அதிகாரமும் உள்ளது.
➤ஜூன் மாதம் காவிரி நீராண்டின் முதல் மாதமாக கருதப்படும், அம்மாதத்தில் காவிரியில் உள்ள அணைகளின் நீரை கணக்கெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
➤ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி 4 மாநில அரசுகளும் தங்களது அணைகளிலுள்ள காவிரி நீர் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
➤பருவ மழை காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி அமைப்பின் கூட்டததை கூட்ட வேண்டும். அவசர காலத்தில் 48 மணி நேரத்தில் கூட்டத்தை கூட்டலாம்.
➤காவிரி ஆற்று படுகைகளில் உள்ள பானசுரசாகர் அணை, ஹேமாவதி, ஹேரங்கி,கபினி, கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஆகிய அனைத்து அணைகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துடன் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் இயக்கப்படும்.
➤மேலும் அணையின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆணையத்துடன் இணைந்து மட்டுமே செயல்படுத்த முடியும்.
➤அணைகளில் புதிய கட்டுமானங்களை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி , மத்திய நீர் வள துறையின் ஒப்புதலுடன் மட்டுமே அந்த பணிகளை மேற்கொள்ள முடியும்
➤காவிரி தீர்ப்பின்படி ஒரு மாநிலத்திற்கு திறக்க வேண்டிய நீரை மற்ற மாநிலம் குறைவாக திறந்தால், அடுத்த முறை நீர் திறப்பின் போது நீர் குறைவாக தந்த மாநிலத்தின் நீரின் அளவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறைத்துவிடும்.
➤நீர் திறப்பில் தாமதமோ, பற்றாக்குறையோ எந்த மாநில அரசு செய்தாலும் அந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
➤மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.