திங்கள், 13 ஆகஸ்ட், 2018

​பூங்காவை சுத்தப்படுத்தும் 6 அறிவாளி காக்கைகள்! August 13, 2018

Image

பிரான்ஸ் நாட்டில் உள்ள தீம் பார்க்கில், குப்பைகளை அகற்ற காக்கைகளை பயன்படுத்துவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் உள்ள Puy du Fou என்ற தீம் பார்க்கில், சிகரெட் குப்பைகளையும் சில சிறிய குப்பைகளையும் சுத்தப்படுத்த 6 அறிவாளி காக்கைகள் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த காக்கைகளுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பூங்காவை சுத்தப்படுத்தும் வேலையை அந்த காக்கைகள் செய்து முடித்தால், அதற்கான பரிசாக சிறப்பு உணவு வழங்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. தற்பொழுது ஒரு காக்கா மட்டுமெ பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் விரைவில் மற்ற 5 காக்கைகளும் பூங்காவை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

பறவைகளை கொடுமை படுத்துவது தங்கள் நோக்கமில்லை என்றும், மக்களிடையே சுத்தம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இது போன்ற வித்தியாசமான முறையை நடைமுறைப் படுத்தியதாகவும் பூங்காவின் நிறுவனர் நிக்கோலஸ் தெரிவித்தார். பறவைகள் பூங்காவை சுத்தப்படுத்துவதை பார்த்த மக்களும் பூங்காவை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

காக்கைகள் புத்திக்கூர்மை வாய்ந்த பறவைகள் என்பதை நிரூபிக்க இந்த நிகழ்வும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.