தமிழகத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, ஏரிக்கு வரும் உபரி நீர் அருகேயுள்ள வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்குடி அருகேயுள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். கீழணையில் இருந்து வரும் நீர்வரத்து காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் நெய்வேலி அருகே உள்ள வாலாஜா ஏரி மற்றும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சேத்தியாதோப்பு அணைகட்டில் இருந்து வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கு வினாடிக்கு 470 கன அடி நீரும், வாலாஜா ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு வினாடிக்கு 420 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.