வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

​திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்! August 10, 2018

Image

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

முத்தலாக் முறையில் இஸ்லாமிய பெண் ஒருவரை விவகாரத்து செய்தால் அவரது கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மசோதா குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து இதில் மூன்று முக்கிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 

கணவனும், மனைவியும் தங்களுக்கிடையே உள்ள பிரச்னையை பேசித் தீர்க்க முடிவெடுத்தால் வழக்கை வாபஸ் பெறுவது, கணவருக்கு ஜாமின் அளிப்பது உள்ளிட்ட 3 திருத்தங்கள் மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. திருத்தங்களுடன்கூடிய இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மசோதாவை நிறைவேற்ற மத்திய தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.