
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றறவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேருவதற்கான கடைசித் தேதி வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.