
உள்ளாட்சித் தேர்தல் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உள்ளாட்சித் தேர்தலை 2017ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் மீது திமுக சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அண்மையில் தள்ளிவைத்த நீதிபதிகள், இன்றைய விசாரணையின்போது, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை எனில், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/6/8/2018/court-disrespect-case-regarding-local-body-election-today-enquiry