ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

2015ம் ஆண்டு சென்னையில் பெய்த பெருமழையின் போது நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை பிரிவு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளை பட்டியலிடத் தொடங்கியது. தற்போது அதன் விவரங்களை அந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Image

➤சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் என 306 இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

➤சென்னை பெருவெள்ளத்தின் போது 15 மண்டலங்களில்  உள்ள 859 இடங்கள்  பாதிக்கப்பட்டிருந்தன.

➤வெள்ளத்தால் மிகவும் பாதிக்கபடக்கூடிய பகுதிகள் என 37 இடங்கள்  கணக்கிடப்பட்டுள்ளது.

➤அடையாறு மண்டலத்தை சுற்றி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய 24 இடங்கள்  பட்டியிலடப்பட்டுள்ளன.

➤அடையாறு மண்டலத்தில் உள்ள திருவான்மியூர், கிண்டி, வேளச்சேரி பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

➤தேனாம்பேட்டை மண்டலத்தை சுற்றியுள்ள 5 பகுதிகள் வெள்ளத்தால் மிகவும்  மோசமாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤வளசரவாக்கம் மண்டலத்தை சுற்றி 26 பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடியது என பட்டியிலடப்பட்டுள்ளது.