
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது.
➤தேசிய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
➤திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, பல்லடம், உடுமலையில் ஆகிய பகுதிகளில் காற்றாலைகள் அதிகளவில் செயல்படுகின்றன.
➤இந்த பகுதிகளஇல் மட்டும், 8,152 மெகாவாட் திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
➤கடந்த வாரம், தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தின் உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக, அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
➤ஆகஸ்ட் 2 -ம் தேதி காற்றாலை மூலம், 8.66 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
➤இதுபோல், ஆகஸ்ட் 3-ம் தேதி 8.71 கோடி யூனிட் மின்சாரமும்,
➤ஆகஸ்ட் 4-ம் தேதி 8.9 கோடி யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.