புல் தரையில் விளையாடப்படும் ஒரே கிரான்ஸ்லாம் தொடரான விம்பள்டனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை, 15 வயதேயான இளம் வீராங்கனை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் முதல் சுற்று போட்டியில் முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸுடன், 15 வயதேயான அமெரிக்க பள்ளி மாணவி கோரி கஃப் மோதினார்.
இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீனஸை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய கோரி கஃப் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீனஸை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய கோரி கஃப் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
முன்னதாக Aliona Bolsova மற்றும் 19ம் நிலை வீராங்கனை Greet Minnen ஆகியோரை வீழ்த்தி விம்பிள்டனின் பிரதான சுற்றுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் கோரி கஃப் தகுதி பெற்றார். இதன் மூலம் மிக குறைந்த வயதில் விம்பிள்டன் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்ற வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
8 வயதில் டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய கோரி கஃப், தனது 13வது வயதில் அமெரிக்க ஓபன் ஜூனியர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இள வயது வீராங்கனை என்ற சிறப்பை படைத்தார்.
போட்டிக்கு பின்னர் கோரி கஃப் அளித்த பேட்டியில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் நான் அழுவது, இது தான் முதல் முறை என்றார்.
வீனஸ் வில்லியம்ஸ் உலக தரவரிசையில் 44வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் கோரி கஃப் 313வது இடத்தில் உள்ளார். இருவருக்குமான வித்தியாசம் 269 ரேங்குகள் ஆகும்.
இதே போல வீனஸின் வயது 39. இருவருக்குமான வயது வித்தியாசம் 24 ஆகும். விம்பிள்டனில் 5 பட்டங்களை வீனஸ் வென்றுள்ளார். இதில் 2 பட்டங்கள் கோரி கஃப் பிறக்கும் முன்பே வீனஸ் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையாக 2002ல் வலம் வந்தவர் வீனஸ் வில்லியம்ஸ்.
credit ns7.tv