credit ns7.tv
17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான நிலையில் தூத்துகுடி நாடாளுமன்ற திமுக உறுப்பினராக கனிமொழி தேர்வாகியுள்ள நிலையில் அவர் ஏற்கனவே வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வைகோ தேர்வு செய்யப்படுவார் என அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருந்த நிலையில் இன்று மதிமுக தலைமை வைகோவை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது.
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது.அதுபோக 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனவும் தொகுதி உடன்பாட்டில் திமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மதிமுக சார்பாக அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருந்தது ஏனென்றால் 1978 முதல் 1996 வரை கிட்டதட்ட 18ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர்.
1998மற்றும் 1999 இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய மூத்த அரசியல்வாதி. வாஜ்பாய் தலைமையில் 1998 அமைச்சரவை ஏற்றபட்ட போது நேரடியாக பிரதமரே வைகோவை அழைத்து அமைச்சரவையில் பங்கேற்க கேட்டும் மறுப்பு தெரிவித்த விதம் அன்றைய காலகட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் வைகோவின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது. அதுபோக இந்தியாவிலுள்ள மூத்த அரசியல்வாதிகளின் நன்மதிப்பை பெற்றவர்.
தற்போது உள்ள சூழலில் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக ஆர்.எஸ் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி சிவா என மூவர் உள்ள நிலையில் வைகோ மக்களவை உறுப்பினராக தேர்வாகும்பட்சத்தில் மத்திய அரசிற்கு சற்று இக்கட்டான சூழலாக அமையும்.