இந்தியாவில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் மது போதைக்கு ஆளாகி இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குழந்தைகள் மத்தியில் மது பழக்கம் அதிகமாகி வருவது குறித்து மக்களவை விவாதிக்கப்பட்டது. இதற்கு, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெஹ்லாட் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் சுமார் 16 கோடி மக்கள் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாகவும் அதில் 6 கோடிக்கும் அதிகமானோர் மது போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், சுமார் 77 லட்சம் பேர் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். போதைப்பழக்கங்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக இதுவரை 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
credit : ns7.tv