பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி, லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் நிலையில் கூடுதல் செஸ் வரியால், எரிபொருள் விலை மேலும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுபோல், தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி, இரண்டரை சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது தங்கம் மீதான தற்போதைய சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து 12.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சுங்க வரி அதிகரிப்பால், அதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
credit ns7.tv