வெள்ளி, 12 ஜூலை, 2019

மேட்டூர் அருகே சோளக்காட்டில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை விரட்டிய மக்கள்! July 12, 2019

Image
மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் உள்ள சோளக்காட்டில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை  வனத்துறையினரும், பொதுமக்களும் வனப்பகுதிக்கு விரட்டினர்.   
 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததை அடுத்து, நீர்தேக்கப் பகுதியான  பண்ணவாடியில் விவசாயிகள் மானாவாரி பயிரான சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில், 3 குட்டி யானைகள் உள்ளிட்ட 14  யானைகள், இந்த சோளக்காட்டுக்குள் முகாமிட்டன. 
அந்த யானைகள், சோளப்பயிர்களை நாசம் செய்து வந்தன. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர்,  பொதுமக்கள் உதவியுடன், யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். 

credit ns7..tv