புதுக்கோட்டை அருகே குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தேசத்தான்பட்டி கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளன. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கே பொதுமக்களின் குடிநீர் வசதியைப் பூர்த்தி செய்யும் வகையில் பொது கிணறு ஒன்று இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிணறு மூடப்பட்டதால் அதன் அருகே அரசு சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தியவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் 13 பேர் உயிரிழந்த நிலையில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.
credit ns7.tv