உத்தரபிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மஜூலி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தேமாஜி, லகிம்பூர், பிஸ்வந்த், நாகோன் உள்ளிட்ட பகுதிகள், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கு நிவாரண பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
credit ns7.tv