தெலங்கானாவில் சிறந்த காவலருக்கான விருது பெற்ற காவலர் ஒருவர், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலங்கானாவை சேர்ந்த பல்லே திருப்பதி ரெட்டி என்பவர் மெஹ்பூபா நகரில் உள்ள காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சிறப்பாக பணியாற்றியதாக சுதந்திர தினத்தன்று தெலங்கானா மாநில அரசால் சிறந்த காவலருக்கான விருது வழங்கப்பட்டது.
இதனிடையே விருது வாங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்லே திருப்பதியை கையும், களவுமாக கைது செய்தனர். விருதுபெற்ற மறுதினமே லஞ்ச புகாரில் காவலர் கைது செய்யப்பட்டது, தெலங்கானா மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதேபோல, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிறந்த தாசில்தார் என்ற விருது பெற்ற தாசில்தார் ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv