சனி, 17 ஆகஸ்ட், 2019

ஆண்ட்ராய்ட் வாட்சப் பயனாளர்கள் விரைவில் பெற இருக்கும் பெரிய பாதுகாப்பு வசதி! August 16, 2019


Image
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் வாட்சப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாட்சப் நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதியை அளிக்க இருக்கிறது.
வாட்சப் செயலி உலகம் முழுவதும் பலகோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாக உள்ளது. இந்த செயலியில் பயனாளர்களின் தகவல்களை யாரும் திருடிவிடக்கூடாது அல்லது கண்காணிக்கக்கூடாது என்பதற்காக பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் end-to-end encrypt செக்யூரிட்டி முறையில் தகவல் பரிமாற்றத்தை செய்துவருகிறது. வாட்சப்பில் பாதுகாப்பு வசதிகள் பல இருந்தாலும், செல்போனை வேறு யாராவது எடுத்து பயன்படுத்தினால் நேரடியாக வாட்சப்பை திறந்து தகவல் பரிமாற்றத்தை பார்க்க முடியும் என்ற அளவிற்கு தான் அதன் பாதுகாப்பு வசதி இருந்துவந்தது. தற்போது வரும் புதிய செல்போன்களில் ஆப் லாக் என்ற பாதுகாப்பு வசதி இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலையே இருந்து வருகின்றது.
இந்நிலையில், வாட்சப்பில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் fingure Print lock வசதியை வாட்சப் நிறுவனம் தன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டாலும், தற்போது தான் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு இந்த வசதியை கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. வாட்சப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதியை சோதனை முறையில் கொடுத்துவரும் வாட்சப் நிறுவனம், விரைவில் மற்ற பயனாளர்களுக்கும் இந்த வசதியை அளிக்க இருக்கிறது. இந்த பயோமெட்ரிக் லாக் வசதியை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் உரையாடல்களை யாரும் படிக்காமல் தடுக்கலாம்.
வாட்சப் பீட்டாவை எப்படி பயன்படுத்துவது?
கூகுள் ப்ளே  ஸ்டோரை திறக்கவும்
வாட்சப் செயலியை தேடவும்
ஸ்க்ரோல் செய்தால் கீழே இருக்கும் “Become a beta tester” என்பதை தேர்வு செய்து  "I'm in" என்பதை தேர்வு செய்யவும்.
“Confirm” கொடுத்ததும் நீங்கள் வாட்சப் பீட்டா பயனாளராக மாறிவிடுவீர்கள்.
இந்த பயோமெட்ரிக் பாதுகாப்பு வசதியை வாட்சப் 2.19.222 வெர்சனில் பெறலாம். இந்த வசதியை பெற கீழ்கண்ட முறைகளை பின்பற்றவும்.
வாட்சப் செயலியை திறக்கவும்.
பின்னர், செயலியின் மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளியை தட்டவும்.
அதில் இருக்கும் பட்டியலில் “settings”ஐ தேர்வு செய்யவும்.
பின்னர், "account" என்பதை தேர்வு செய்யவும்.
Account பிரிவில் Privacy என்பதை தேர்வு செய்யவும்.
privacy திரையின் கீழேச் சென்றால் 'FingerPrint Lock' என்று இருக்கும். அதை தேர்வு செய்யுங்கள்.
திரையில் தோன்றும் ‘Unlock with fingerprint’ என்ற ஸ்விட்சை ஆன் செய்யவும்.
பின்னர் உங்கள் விரல் ரேகையை பதிவு செய்யவும்.
பதிவு செய்தவுடன் வரும் திரையில், இந்த வசதியை பயன்படுத்த சம்மதிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்தவுடன் உங்கள் வாட்சப் செயலியின் பாதுகாப்பு உங்கள் விரல்நுனிக்கு வந்துவிடும்.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் ஐஓஎஸ் பீட்டா பயனாளர்களுக்கு இந்த வசதியை கொடுத்த வாட்சப், பயோ மெட்ரிக் வசதி மட்டுமல்லாது, face ID வசதியையும் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு பயோமெட்ரிக் வசதியை மட்டுமே கொடுக்கிறது. தற்போதைக்கு பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே இதை கொடுத்துவரும் இந்த வசதியை, மிக விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியை ஆண்ட்ராய்ட் மார்ஷ்மாலோ இயங்குதளத்தை பயன்படுத்தும் பயனாளர்கள் அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்பு வசதி இருக்கும் செல்போனை பயன்படுத்தும் அனைவரும் பயன்படுத்தலாம்
இந்த வசதி மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராமில் இருக்கும் மற்றொரு வசதியையும் அதன் பயனாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது வாட்சப் நிறுவனம்.
அது என்னவெனில், இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரசித்திப்பெற்ற பயனான பூமராங் வசதியை வாட்சப்பிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வசதியின் மூலம் 7 நொடிகளுக்குள்ளான வீடியோக்களை எடுத்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

credit ns7.tv