ஜம்மு காஷ்மீர் தொடர்பாக தன்னிச்சையான முடிவு எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சீனா, காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெய்ஜிங்கில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் Hua Chunying, காஷ்மீரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதாக தெரிவிப்பதை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் எந்தவித விளைவுகளும் ஏற்பட போவதில்லை என்றும் Hua Chunying தெரிவித்தார்.
இதனிடையே இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவிஸ் குமார், இந்தியாவின் உள்விவகரங்களில் பிற நாடுகளின் தலையீடுகளுக்கு பதிலளிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், இந்திய சீனா இடையேயான எல்லை என்பது இருநாடுகளாலும் ஏற்கனவே பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்றும் ராவிஸ் குமார் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv