ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

விண்ணில் செலுத்தப்பட்ட அரசு பள்ளி மாணவர்களின் செயற்கைகோள்..! August 11, 2019

Image
அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடைக்கொண்ட செயற்கைகோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் தயாரித்த 30 கிராம் எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோள், சென்னை சிறுசேரி பகுதியில், உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா வளாகத்தில், இருந்து ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி துறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற போட்டியை 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு நடத்தியது. இதில், 32 பள்ளிகள் கலந்து கொண்டன. 12 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை தேர்ந்தேடுத்து, அவர்கள் தயாரித்த 30 கிராம் எடையை கொண்ட சிறிய செயற்கைக்கோளானது, இன்று ராட்சத பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. 

credit ns7.tv