ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

மீனவர்களுக்கான புதிய செயலி அறிமுகம் செய்த தமிழக அரசு..! August 11, 2019

டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக மீனவர்களும் நன்மை அடையும் வகையில் செல்போன் செயலி ஒன்றை அறிமுகபடுத்திருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளை ஒட்டி 13 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், துடுப்புப் படகுககளில், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கின்றனர். 
இந்நிலையில், மீனவர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக ஆன்ட்ராய்ட் செயலியை தமிழக அரசு தூண்டில் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. தூண்டில் ஆன்ட்ராய்டு செயலியை  "Thoondill" என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Image
credit ns7.tv