சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வில், பழங்கால நீண்ட கோட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், 5ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. போத குரு என்பவரது நிலத்தில் அகழாய்வு நடந்தபோது, சுவர் ஒன்று தென்பட்டது. அதை பின் தொடர்ந்து தோண்டியபோது, அந்த சுவர் முருகேசன் என்பவரது நிலம் வழியாக நீண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
நீளமான இந்த சுவர், படைக்கலன்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பாதுகாப்பு சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் தொடர் அகழாய்வு நடத்த தொல்லியல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
credit ns7.tv