ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்

கொரோனா பெருந்தொற்று முடக்க காலநிலையில் பள்ளியில் வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பொருத்தமான வழிகாட்டு நெறிமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.

டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலைக் கொண்ட கற்றவர்கள் மற்றும் குறைந்த அல்லது அணுகல் இல்லாத கற்பவர்கள் என இருதரப்பினருக்கும் தேவையான அம்சங்களும்  வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டன.

 முக்கிய அம்சங்கள்:  

வகுப்பு நேரங்கள்:   

வகுப்பு – 1 முதல் 8 வரை : தீர்மானிக்கும் நாட்களில் ஒவ்வொரு வகுப்பும் 30-45 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல்  இணையம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளலாம்;

வகுப்பு – 9 முதல் 12 வரை: தீர்மானித்த நாட்களில் இணையம் மூலம் ஒத்திசைவுக் கற்றல் தலா 30-45 நிமிடங்களுக்கு நான்கு அமர்வுகளுக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளலாம்;

ஒன்றாம் வகுப்புக்கு முன்பு: ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோருடன் உரையாடுவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் 30 நிமிடங்களுக்கு மேல் அல்ல.

உடல், மன ஆரோக்கியம் பாதுக்காக்க வேண்டும்:  

ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்களை  கட்டாயப்படுத்த கூடாது. பள்ளிகள்,   வருகைப் பதிவேடு, மதிப்பெண்களாடு ஆன்லைன்  வகுப்புகளை இணைக்கக்கூடாது. இணைய வழிக் கல்வியின் போது உடல், மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பாதுக்கப்பு இன்றியமையாத ஒன்று எனவும் தெரிவ்க்கப்பட்டது.  ஆன்லைன் வகுப்புகளில் செய்யும் மதிப்பீடுகள் யாவும் இறுதி மதிப்பெண்களுக்கு எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் உதவ  வேண்டும்: 

டிஜிட்டல் சாதனம் அணுகல் இல்லாத மாணவர்களுக்கு முடிந்த வரை அவற்றை அனுகம் பள்ளிக்கூடங்கள் உதவ  வேண்டும்;

சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதரவையும் பள்ளிகள் திட்டமிட்டிருக்க வேண்டும்,

இணையப் பாதுகாப்பு குறித்து செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை போதுமான அளவு வழங்குகிறது.

திட்டமிடல் வேண்டும்:   

தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களுடனும் பெற்றோருடனும் தொடர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகக் கடுமையாக இருக்கும்வகையில் இணைய வழிக் கல்வியை செயல்படுத்தக்கூடாது என்பதை உறுதி படுத்த வேண்டும்.