அண்மையில் நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோவைக் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தங்களுக்கு இந்தி தெரியும் என்று கூறியது குறித்து கருத்து கேட்டனர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எங்களுக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவருக்கு இந்த ஞானோதயம் எப்படி ஏற்பட்டது. அவர் முதலில் எந்த கட்சியைச் சேர்ந்தவர். அவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்றால் தேர்தல் பிரசாரத்துக்கு வரவே இல்லையே. அதிமுக எங்களுடைய கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய பாஜக எல்லாம் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். அப்போது அவர் எங்கேயுமே அவர் பிரசாரத்துக்கு வரவே இல்லை. அதுமட்டுமில்லை அவர அதிமுகவில் இருந்தார். அதிமுகவில் இருந்து அதிமுகவை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற காரணத்தினால்தான் அவர் அதிமுகவில் இருந்து அம்மாவால் நீக்கப்பட்டார். அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். அதனால் அவருகெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நான் பெரிய கட்சித் தலைவராக நான் நினைக்கவில்லை. அவர் ஏதாவது பேசுவார். பேசிவிட்டு வழக்கு வந்தால் போய் ஒளிந்துகொள்வார். அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்” என்று கூறினார்.