சனி, 10 மார்ச், 2018

மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என நோட்டிஸ், அய்யா கண்ணுவை கண்ணத்தில் அறைந்து செருப்பால் அடிக்க பாய்ந்த பாஜக பெண் நிர்வாகி , திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பரபரப்பு


மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக அய்யா கண்ணு அவர்கள் ஒரு தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். திருச்செந்தூர் கோவிலுக்கு பிரார்த்தனைக்கு சென்ற அவர் இது தொடாபான நோட்டிசுகளை விநியோம் செய்த போது பாஜக வின் மகளீர் அணி நிர்வாகி இவன் ஒரு ஃபிராடு இவன் கொடுக்கும் நோட்டிசை வாங்காதீர்கள் எனக் கூறினார். இதில் வாக்கு வாதம் ஏற்பட்டு அய்யா கண்ணுவை
அந்த பெண் கண்ணத்தில் அறைந்தார். மேலும் செருப்பை கழட்டி அடிக்க பாய்ந்தார்.
நோட்டிஸ் கொடுத்த அய்யா கண்ணுவை பாஜக பெண் ஃபிராடு எனக் கூற பதிலுக்கு அய்யா கண்ணு அந்த பெண்ணை திட்ட பதிலுக்கு அந்த பெண் அய்யா கண்ணு கண்ணத்தில் அறைய என சண்டை மூண்டது.
மரபண மாற்றப்பட்ட விதைகளை பிரதமர் மோடி இறக்குமதி செய்ய கூடாது இதற்காக கடவுளிடம் பிரார்த்திகின்றோம் என்ற அடிப்படையில் நோட்டிஸ் அமைந்ததால் பிரதமரை எப்படி விமர்சிக்கலாம் எனக் கூறி அந்த பாஜக பெண் நோட்டிஸ் விநியோகத்தை தடுத்துள்ளார். இதில் சண்டை ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரு தரப்புரம் ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர். கோவில் வளாகம் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை பேசி இரு தரப்பும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியில் அங்கிருந்த பெரியர்கள் சண்டையை நிறுத்தினர்.
பாஜக பெண் அய்யா கண்ணுவை அறைந்ததால் அந்த இடம் பரபரப்பானது. கோவில் வளாகத்திற்குள் நோட்டிஸ் விநியோகம் செய்ய அனுமதி உள்ளதா என அங்கிருந்தவர்கள் கேட்டனர்.
(உங்களுக்காக சற்று முன் ல் வெளியாகும் செய்திகள் தவறாமல் கிடைக்க See First ஆப்சனை சற்று முன் பக்கத்தில் எனேபில் செய்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

Related Posts: