பருவமழை வலுப்பெற்று வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதின் தாக்கம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.