சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட ஒரே ஆண்டில், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 பழங்கால சிலைகளை அவர் மீட்டுள்ளார்.
எந்தெந்த சிலைகளை அவர் மீட்டார், இதில், எத்தனைபேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் இதோ...
➤ 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 சிலைகள் மீட்கப்பட்டன. இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2017-ம் ஆண்டு அதே செப்டம்பர் மாதம் அருப்புக்கோட்டையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 3 சிலைகளை திருடிய டிஎஸ்பி காதர்பாஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரத்திலிருந்து கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள சிலை மீட்கப்பட்டது. இந்த சிலையை கடத்திய 4பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தஞ்சாவூர், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலிலிருந்து கடத்தப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மீட்கப்பட்டது. இந்த சிலையை கடத்திச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2017-ம் ஆண்டு அதே நவம்பர் மாதம் ஈரோட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் சிவலிங்க சிலை மீட்கப்பட்டது. அந்த சிலையை கடத்திய 3 பேர் கைதாகினர்.
➤ 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாடனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலையை மீட்ட பொன் மாணிக்கவேல் குழுவினர், கடத்தலில் தொடர்புடைய 3பேரை கைது செய்தனர்.
➤ 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருநெல்வேலி, வீரவநல்லூர் கோயிலிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 2 துவார பாலகர்கள் கற்சிலைகளை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வேலூரிலிருந்து கடத்திச் சென்று விற்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள் விநாயகர் சிலை மீட்கப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடைய மூவர் கைதாகினர்.
➤ 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சங்கரன்கோயிலில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளி பல்லக்கை திருடி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பழனி முருகன் கோயிலில் ஐம்பொன் முருகர் சிலை செய்ததில் ரூ.1.31 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2018-ம் ஆண்டு மே மாதம் வேலூர், பேரணாம்பட்டிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.25 லட்ச மதிப்புள்ள 3 சிலைகள் மீட்கப்பட்டு, 3பேர் கைது செய்யப்பட்டனர்.
➤ 2018-ம் ஆண்டு அதே மே மாதம் தஞ்சை பெரிய கோயிலிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதா சிலைகள் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டன.