புதன், 4 ஜூலை, 2018

குடிநீர் தேவைக்காக அண்டார்டிகாவில் இருந்து பிரம்மாண்ட பனிக்கட்டி பாறையை கொண்டுவரும் துபாய்! July 3, 2018

Image


உள்நாட்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அண்டார்டிகா பகுதியில் மிதக்கும் பிரம்மாண்ட பனிக்கட்டி பாறை ஒன்றினை தங்கள் நாட்டின் கரையருகே இழுத்து வரப்போகிறது துபாய் அரசு. அதன் மூலம் குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் தண்ணீர் வளம் இல்லாத பாலைவனப் பகுதியாகவே விளங்குகிறது. இங்கு நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக மிகவும் புதுமையான முயற்சி ஒன்றில் ஐக்கிய அரபு அமீரக அரசு இறங்கியுள்ளது.

உலகின் துருவப் பகுதிகளில் பிரம்மாண்டமான பனிக்கட்டி பாறைகள் எண்ணற்றவை நிறைந்துள்ளன. துருவப் பகுதிகளில் ஒன்றான அண்டார்டிகா பகுதியில் மிதக்கும் பிரம்மாண்ட ஐஸ்கட்டி பாறை ஒன்றினை துபாய் நாட்டின் கரைக்கு இழுத்து வந்து, தங்கள் நாட்டு மக்களுக்கு நன்னீரை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியான நிலையில், தற்சமயம் இந்த திட்டம் அடுத்த கட்டத்தினை எட்டியுள்ளது. Iceberg Project என்ற பெயர் வைக்கப்பட்டு, இதற்கான வேலைகள், திட்ட மதிப்பீடு, அறிஞர் குழு, வல்லுநர் குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

300 - 400 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படத்தப்பட உள்ளது. தற்சமயம் பனிக்கட்டிகள் உருகாமல் எவ்வாறு அதனை எடுத்து வருவது போன்ற நடைமுறை குறித்த பணிகள் வகுக்கப்பட்டுள்ளன.

துபாயின் Fujairah கரைப்பகுதியில் இந்த பணிக்கட்டி பாறை கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2019 ஆண்டு இறுதியில் அல்லது 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.