வியாழன், 5 ஜூலை, 2018

தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளி இயக்ககம் எச்சரிக்கை...! July 5, 2018

தனியார் பள்ளிகளில் வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,  நீட் பயிற்சி வகுப்பில் சேரும்படி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக நோக்கத்துடன் கூடிய நிறுவனங்களை கொண்டு நீட் பயிற்சி அளிக்க கூடாது ; பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது ; நீட் பயிற்சியில் சேர மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

பள்ளி நேரங்களில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் நீட் போன்ற பயிற்சிகள் அளிக்கக் கூடாது ; தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர வேறு கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது; விதிகளை மீறி, நீட் தேர்வு பயிற்சி அளித்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: