சனி, 11 ஆகஸ்ட், 2018

​பிரதமர் மோடியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்! August 11, 2018

Image

மாநிலங்களவையில், பிரதமர் மோடி பேசிய சில கருத்துக்கள், முதல் முறையாக சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வி யடைந்தார். 

இந்நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதை, சபைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியின் கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

Related Posts: