ஒரு காலத்தில் ப்ளூ வேல் சேலஞ்ச் குழந்தைகளை அச்சுறுத்தியது போல தற்பொழுது குழந்தைகளை அச்சுறுத்தி வருவது மோமோ சேலஞ்ச்.
அர்ஜெண்டீனாவை சேர்ந்த 12 வயது சிறுமி மோமோ சேலஞ்ச் விளையாடி உயிரிழந்ததை அடுத்து, சமூகவலைதளங்களில் மிக அதிகமாக மோமோ சேலஞ்ச் பற்றி தெரியவந்துள்ளது.
மோமோ சேலஞ்ச்:
முதன்முதலாக ஃபேஸ்புக் மூலம் பரவிவந்த இந்த மோமோ சேலஞ்ச், தற்பொழுது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு அகோரமான பெண் போல் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தி, இதுபோன்ற அச்சுறுத்தல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன என பலர் தகவல் தெரிவித்துள்ளனர். மோமோ சேலஞ்சில் பயன்படுத்தப்படும் பெண்ணின் புகைப்படம், ஜப்பானை சேர்ந்த கலைஞர் Midori Hayashi என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அந்த சேலஞ்சிற்கும் எந்த விதமான தொடர்பு இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டு போலவே, இதிலும் அடுத்த சுற்றிற்கு செல்வதற்கு கையை கத்தியால் வெட்டிக்கொள்வது, போன்றவற்றை செய்யுமாறு குழந்தைகளை மிரட்டி பின்னர் தற்கொலை செய்துகொள்ள வலியுறுத்தும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளின் மனதை அச்சுறுத்தும் வகையிலான புகைப்படங்களையும் வெளியிட்டு, பின்னர் அது கொடுக்கும் Task-ஐ செய்யுமாறு கொடுமைப்படுத்தும். இதுவே மோமோ சேலஞ்ச். கொலம்பியா, ஜப்பான், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் எண்களில் இருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வருகின்றன என்று பரவி வருகிறது. மற்ற நாடுகளில் தற்பொழுது பரவிக்கொண்டிருக்கும் மோமோ சேலஞ்.
மற்ற நாடுகளில் பரவி வரும் இந்த மோமோ சேலஞ்ச் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை என்றாலும், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மோமோ சேலஞ்ச் பற்றி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.