ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

​அணில் குட்டி துரத்துவதாக காவல்துறையின் உதவியை நாடிய இளைஞர்! August 12, 2018

Image

ஜெர்மானியர் ஒருவரை குட்டி அணில் ஒன்று துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஒருவர், அந்நாட்டு காவல்துறையினருக்கு அழைத்து, தன்னை அணில் குட்டி துரத்துவதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் படபடப்புடன் தெரிவித்தார். முதலில் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்ட காவல்துரையினர், சிசிடிவி காட்சிகளின் மூலம், அணில் குட்டி அவரை துரத்துவதை உறுதிபடுத்திக்கொண்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை அணில் குட்டியிடம் இருந்து காப்பாற்றி அந்த அணில் குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். அந்த அணில் குட்டிக்கு கார்ல் ஃப்ரைட் ரிச் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த விசித்திர சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட பொழுது பசியில் இருக்கும் அணில் குட்டிகளும், தனிமையில் இருக்கும் அணில் குட்டிகளும் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் என்பது தெரியவந்துள்ளது.