சனி, 4 ஆகஸ்ட், 2018

சர்க்கரை நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் August 3, 2018

Image

உலகம் முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற நோயாகிவிட்டது நீரிழிவு நோய். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதனால் ஏற்படும் நீரிழிவு நோய் உள்ளவர்கள், உணவு கட்டுப்பாட்டை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடுவதில் சில உணவு பொருட்களை தவிர்த்தால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கலாம்.

​சர்க்கரை நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை:

1. உலர் திராட்சை:

சர்க்கரை நோய் உள்ளவர்கள், உலர் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அப்படி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரித்து எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2. தர்பூசணி:

சர்க்கரை நோய் உள்ளவர்கள், தர்பூசணி பழங்கள் சாப்பிடக்கூடாது. தர்பூசணியில், கார்போஹைட்ரேட்டின் அளவு 72 இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தர்பூசணியை தங்களது உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

3. உருளைக்கிழங்கு:

நம் உணவில் அதிக இடம் பிடித்திருப்பது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கில் அதிக அளவு புரத சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவைகள் இருந்தாலும், கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது.

4. மாம்பழம்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக இனிப்பு சுவை உடைய பழங்களை தவிர்ப்பது நல்லது எனவும் குறிப்பாக மாம்பழம் சாப்பிடுவதை முற்றிலுமாக ஒதுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

5. சப்போட்டா:

சப்போட்டா சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

6. பழச்சாறுகள்:

பழச்சாறுகளில் அதிக அளவு இனிப்பு சுவை இருக்கும். அதனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாறு அருந்தக்கூடாது.