மாநிலங்களவையில் முதன்முறையாக அறிமுக பெண் எம்பி ஒருவர், அவையை வழிநடத்தினார்.
மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கக்கசான் பர்வீன் (Kahkashan Perween ) என்ற பெண் உறுப்பினரை, கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்கள் தினத்தின்போது துணை தலைவராக . குடியரசுத்துறை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு தேர்வு செய்தார். இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கக்கசான் பர்வீன் அவையை வழிநடத்தினார்.
அவையை சுமூகமாக வழிநடத்தியதற்கு கக்கசான் பர்வீனுக்கு வெங்கய்யா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். அறிமுக பெண் எம்பி ஒருவர் மாநிலங்களவையை வழிநடத்துவது இதுவே முதன்முறையாகும்.